தென்னிந்தியாவில் தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தான் சாய்பல்லவி. தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகும் பல நடிகைகளில் முக்கியமான ஒரு நடிகையாக கருதப்பட்டவர்களில் இவரும் ஒருவர் தான் .
இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான “பிரேமம்” என்ற மலையாள திரைப்படத்தில் “மலர் டீச்சர்” என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி.
இவரை இன்றும் பலர் அவரை “மலர் டீச்சர்” என்று தான் கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் ம.னதை கவ.ர்ந்தவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வருகிறார் நடிகை சாய்பல்லவி.
இவர் தமிழில் “தியா” என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தனுஷ் மற்றும் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான “கார்கி” என்ற தமிழ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை சாய்பல்லவி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பரிசுகளையும் வென்று உள்ளார்..இவரைத் தொடர்ந்து சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் தற்போது சினிமாவில் செம்மையாக கலக்கி கொண்டிருக்கிறார்.