தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்து விட்ட நிலையிலும் கூட படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் திருமணம் ஆகி விட்டாலே சினிமாவிலிருந்து ஒதுங்கி விடுவார்கள். ஆனால் 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் கூட நடிகை நயன்தாரா விற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
மலையாள நடிகையான நடிகை நயன்தாரா கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் பள்ளி மாணவியாக குட்டை பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி நடிகை நயன்தாரா அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி நடிகர் விஜய்யுடன் சிவகாசி அஜீத்துடன் பில்லா என குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக விஸ்வரூபம் எடுத்தார்.
திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தற்போது படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கோல்டு என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் தான் நடிகை சாய் பல்லவி மற்றும் நிவின்பாலி ஆகியோரின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான கனெக்ட் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது கணவருடன் திரையரங்கிற்கு வந்திருந்தார் நடிகை நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.