தென்னிந்திய தமிழ் சினிமாவில் பொதுவாக கௌசல்யா என்று அழைக்கப்படும் நந்தினி ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்.இவர் 90’ஸ் சினிமாவில் முக்கியமாக நடித்துள்ளார்.
இவர் மலையாள திரையுலகில் “நந்தினி” என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். முன்னணி கதாநாயகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் ,பின்னர் துணை வேடங்களில் நடித்தார்..
முரளியுடன் தனது முதல் தமிழ் திரைப்படமான “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தில் நடித்தார்.
மேலும் தமிழில் “நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லமலே, பூவேலி, வானத்தைப்பொல மற்றும் குட்டி” போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து அசத்தி இருந்தார். அவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
2000-களில் , அவர் குணச்சித்திர கலைஞராக மாறினார் மற்றும் “திருமலை, சந்தோஷ் சுப்ரமணியம் ” போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தார் மேலும் சன் டிவியில் 436-எபிசோட்களை ஒளிபரப்பிய “மனைவி” தொடருடன் தொலைக்காட்சியில் நுழைந்தார்.
கௌசல்யா 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஷாலின் “பூஜை” என்ற அதிரடித் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் துறைக்குத் திரும்பினார்.தற்போது அவர் பட வாய்ப்பை பெற கவர்ச்சி போட்டோகளை பதிவிட்டு வருகிறார்.