இவர் 2006ஆம் ஆண்டு ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான “கேடி” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் சிறுத்தை, படிக்காதவன், பையா அயன், தர்மதுரை, வீரம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தார் .
மேலும் இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது 32 வயதை எட்டியிருக்கும் தமன்னா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியாக உள்ள “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.
எல்லா முன்னணி நடிகை போலவே சோஷியல் மீடியாவில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்தின் மூலம் இளைஞர்களை கிறங்கடித்து விட்டார் என்று கூறலாம். அந்த வகையில் பச்சை நிற உடை அணிந்து கொண்டு தன் கவர்ச்சியான உடலை முழுவதுமாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.