இவர் “காதல் சொல்ல வந்தேன்” எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . பின்பு சினேகன் ஹீரோவாக நடித்த “உயர்திரு” மற்றும் “420 என்ற நந்தா” உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். இவர் ஒரு கன்னட நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகையால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார். பின்னர் நடிகை மேக்னா ராஜ், தான் காதலித்து வந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 2017ல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின்பும் மூன்று மலையாள படங்களிலும் மூன்று கன்னட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு இவர் கர்ப்பமாக இருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இவரது கணவர் சிரஞ்சீவி உயிரிழந்தார் . இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால், துவண்டு போன இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
மீண்டும் தன்னுடைய கணவர் என்னுடைய மகன் வடிவில் எனக்கு கிடைத்துள்ளார் என்று மகிழ்ச்சி அடைந்தார் மேக்னா. தற்போது, தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில் நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் “இது உடம்பா இல்ல நாட்டுக்கட்ட யா” என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.