கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பிரியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் சின்னத்திரை தொடர்களில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பதை மாற்றிக் காட்டியவர் பிரியா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடித்தார். அதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இவர் டிவியில் தொகுப்பாளினி மற்றும் சின்னத்திரையில் நடிகையாக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஹீரோயினாக வெற்றி பெற்றார்.
மேயாத மான் படத்தின் வெற்றிக்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், பொம்மை மற்றும் பத்து தல போன்ற படங்களில் நடித்தார்.இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இந்தியன் 2 படத்த்லும் நடித்து வருகிறார்.
இப்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி உள்ளது. கலர்புல்லான உடையில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அதில் மஞ்சள் நிற சேலையில் வெட்கப்பட்டு கொண்டே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் ரீச் ஆகியுள்ளன.