“நேரம்” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமான இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் அதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான நான் பிரகாஷன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின்னர், தமிழில், இவர் நடித்த சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. இதனால், அஞ்சு குரியன் பெரிதும் அறியப்படாமல் போனார். தமிழிலும் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.
ஓம் சாந்தி ஓ ஷானா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்த இவர் பல குறும்படங்களில் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடித்த சிபு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.