தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் சிம்பு. டி.ராஜேந்தரின் மகனான சிம்பு எப்போதுமே சர்ச்சைக்குப் பெயர் போனவர். நயன்தாராவோடு காதல் விவகாரத்தில் சர்ச்சை தொடங்கி, இப்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனோடு மல்லுக்கட்டு வரை அடிக்கடி பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார் சிலம்பரசன்.
நீண்டகாலத்துக்குப் பின்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு. அதேநேரம் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் அதே அளவுக்கு இருக்கிறது. சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தை யாரும் மறக்கமுடியாது. அவரது ஆரம்ப காலத்தில் நல்ல ஹிட் படமாக அது அமைந்தது. இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் சார்மி கவுர். 1987 ஆம் ஆண்டு பிறந்த சார்மி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.
வட இந்தியப் படங்களில் இருந்துதான் தமிழுக்கு வந்தார் சார்மி. தமிழில் போதிய வாய்ப்பு இல்லாத நிலையில் விக்ரம் நடித்த பத்து என்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். சார்மி, இப்போது மிகவும் குண்டாகி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் காதல் அழிவதில்லை சார்மியா இது எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்