சினிமாவை பொறுத்தவரையில் எப்போதும் புதுமுக நடிகை நடிகர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் இருக்கிறது. இதற்கு காரணம் அந்த காலத்து சினிமாவிற்கும் இந்த காலத்து சினிமாவிற்கும் ஏராளமான மாற்றங்கள் இருந்து வருகின்றனர். தற்போதைய காலங்களில் சினிமாவை ஓரங்கட்டும் வகையில் சின்னத்திரையில் வரும் நிகழ்சிகளை தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதனால் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு சுலபமாக பட வாய்ப்புகள் கிடைத்து விடுகின்றனர்.
முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி தான் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது.
தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார். தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
முதலில் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருந்த பிரியா பவானி சங்கர் சமீப காலமாக தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாகக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தி அடைந்துவிட்டனர். இதே போல் நிறைய நடிகைகள் கொழுகொழுவென இருக்கும் தனது உடலை குறைத்த பிறகு ரசிகர் பட்டாளம் இல்லாமல் காணாமல் போயினர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தற்போது ஆளே அடையலாம் தெரியாத மாதிரி இருக்கும் பிரியா பவானி சங்கர் , அந்த புகைப்படங்களை சமுகவளைதலங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.