நடிகை மீனா 1981இல் மேஜர் சுந்தரராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன் நடித்த நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் 1990இல் ஒரு புதிய கதை படத்தில் கதாநாயகியாகவும் அறிமுகமாகி கொடி கட்டி பறந்தார். திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் அண்ணாத்த படத்தில் கடைசியாக நடத்திருந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வித்யாசாகர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகர் உயிரிழந்துள்ளார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நுரையீரல் பிரச்சனையுடன் கொரோனா பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கருதப்படுகிறது.
முன்னதாக மீனாவின் கணவர் வித்யாசாகர், தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள போதும், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வித்யாசாகர் உயிரிழந்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் வித்யாசகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தாலும், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனதே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. நுரையீரல் பிரச்சனையுடன் கொரோனா பாதிப்பும் இருந்ததால் அவரை காப்பாற்ற மருத்துவர்களால் முடியவில்லை என்று கருதப்படுகிறது. முன்னதாக மீனாவின் கணவர் வித்யாசாகர், தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ள போதும், தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது