தமிழ் திரையுலகில் முண்ணனி கதாநாயகியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தையாக இருந்த போதே சினிமாவில் அறிமுகமாகி 90களில் கொடிகட்டிப் பறந்தவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். தற்போது இவரின் கணவர் காலமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனாவின் கணவர் வித்யாசாகர். சாஃப்ட்வேர் இன்ஜினியரன இவருக்கு கடந்த 2009ம் ஆண்டு மீனாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர். நைனிகா 2016ம் ஆண்டு வெளியான “தெறி” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தினார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மீனாவின் கணவர், அவரின் தாயார், மீனா என அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நுரையீரல் பாதிப்பால் சில மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார் வித்யாசாகர். இந்த நிலையில் அவர் சிகச்சை பலனளிக்காமல் தற்போது உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் இறப்பு செய்தி குறித்து பேசிய உறவினர்கள், ஏற்கனவே மீனாவின் கணவருக்கு நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறினர். இரண்டு நுரையீரல்களையும் மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினர். இது புறாக்களின் எச்சம் கலந்த காற்றினால் ஏற்படும் நோய் எனவும், பெங்களூருவில் அவரின் வீட்டிற்கு அருகில் நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் அவருக்கு அழற்சி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அவருக்கு புத்தாண்டு சமயத்தில் கொரோனா தொற்று ஏற்பட நிலைமை மோசமடைந்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.