தமிழில் சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவருடைய பெயரை சொன்னாலே “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா என்ற கதாபாத்திரம் தான் நினைவுக்கு வரும்.
அந்த காமெடியில் புஷ்பா என்ற பெயருக்கு சொந்தக்காரி ரேஷ்மா பசுபுலேட்டி தான். இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். சினிமாவில் நுழையும் முன்பு சின்னத்திரையில் சீரியல்களிலும் தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர் விமான பணிப்பெண்ணாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர்.
மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. தன்னுடைய சொந்த கதைகளை கூறி பிக்பாஸ் ரசிகர்களை கலங்க வைத்தது பலருக்கும் நினைவிருக்கும்.
தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பாலில் ஊற வைத்த பணியாரம் என்று இவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.