இவருடைய தந்தை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் மற்றும் இவருடைய தாய் பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவி ஆவார். பாலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகைகளில் நடிகை ஜான்வி கபூரும் ஒருவர். தனது முதல் பதிப்பை ஜான்வி கொடுக்கும் முன்னரே அவரது தாயார் மறைந்தது ஜான்விக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்திருந்தது. பின்னர் படமான ‘தடக்’ படம் மூலம் அறிமுகமான இவர் மீண்டெழுந்து திரை பயணத்தை தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது ஜான்வி லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு “குட்லக் ஜெர்ரி” என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.தொடர்ந்து மலையாள ரீமேக்கான “ஹெலன்” படத்திலும் நடிக்கவுள்ளார்.
பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது மேலும் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றது.