நடிகர் தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகம் முழுதும் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
இந்நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள நடிகை நித்யாமேனன் ஒரு பேட்டியில் இந்த படத்தில் எனக்கு எப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது நடிகர் தனுஷ் எனக்கு போன் செய்தார். ஒரு கதை இருக்கிறது அதில் நீங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லோருடனும் நடிக்கிறீர்கள். சமீபத்தில் மிஸ்கின் கூட கூட படம் பண்ணி இருந்தீர்கள். ஆனால் என் கூட பண்ண மாட்டீர்களா..? என்று கேட்டார்.
இதைக்கேட்டு, சார் கண்டிப்பாக பண்ணலாம் சார். வந்து கதை சொல்லுங்க என்று கூறினேன். மேலும், படப்பிடிப்பு தளத்தில் நான் நடிக்கும் காட்சிகளை ஒருமுறை சொன்னாலே சரியாக புரிந்துகொண்டு அதனை அப்படியே நடித்துக் காட்டுகிறார் என்று அடிக்கடி சொல்லி என்னை பாராட்டினார் நடிகர் தனுஷ்.
பொதுவாக பெரிய பேனரில் இருக்கும் நடிகர்கள் நடிகைகளின் நடிப்பு திறமையை பாராட்டுவது அல்லது சக கலைஞர்களை பாராட்டுவது இயல்பு கிடையாது பலரும் அதை செய்ய மாட்டார்கள்.
தங்களுடைய பகுதியை நடித்து முடித்து விட்டு சென்று விடுவார்கள். ஆனால், நடிகர் தனுஷ் என்னுடைய நடிப்புத் திறமையை பாராட்டி சில ஆலோசனைகளையும் வழங்கினார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்தது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது என்று கூறியிருக்கிறார் நடிகை நித்யா மேனன்.