ஆரம்ப காலத்தில் சன் மியூசிக் என்ன பாட்டு வேண்டும் என்று எல்லோரிடமும் கேட்டு தனது அசத்தல் குரலால் அநேக ரசிகர்களை கவர்ந்த இவர் தனது திறமையான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய கெப்பாசிட்டியால் சின்னத்திரைக்கு நகர்ந்து வந்து சீரியல்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் சென்னை சீரியல்களான செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா போன்ற பிரபலமான சீரியல்களில் தொடர்ந்து நடித்து அவரது ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார். மேலும் சீரியல்களோடு நிறுத்தி விடாமல் இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் விடியும் வரை காட்டிலும் மற்றும் முன்னறிவான் போன்ற படங்களில் இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கின்ற வேளையில் இவர் தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்திர சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் இவர்களது நெருங்கிய உறவு மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் நடைபெற்றது.