தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயா-விற்கும் பிறந்த மூத்த மகள் தான் வரலட்சுமி. இவர் முதல் முதலாக “போடா போடி” என்ற திரைப்படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக, கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து “சண்டைக்கோழி” மற்றும் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து “தாரை தப்பட்டை, விக்ரம் வேதா” உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான “இரவின் நிழல்” மற்றும் “பொய்க்கால் குதிரை” ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
அதனால் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இவர் முதல் முதலாக தனது தங்கையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
வரலட்சுமி சரத்குமார் தனது தாய் “சாயா” மற்றும் தனது “தங்கை பூஜா சரத்குமார்” உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.