தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும் தல அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கிடைத்தது இந்த இரண்டு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸை நல்ல வசூலை வாரி குவித்தது.இதனால் இரண்டு திரைப்பட படக்குழுவினரும், தயாரிப்பாளர்களும் உற்சாகத்தில் அடைந்தனர்.
தல நடித்த துணிவு திரைப்படம் ஆக்சன் படமாக எடுக்கப்பட்டு இருந்ததால் இந்த திரைப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.இன்னொரு பக்கம் வாரிசு திரைப்படம் நல்ல குடும்ப உறவு திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தால் இந்த திரைப்படத்தை குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.இதனால் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக முன்னிலையில் இருக்கிறது.
துணிவு திரைப்படம் 12 நாள் முடிவில் உலக அளவில் ரூ 200 கோடி கலெக்ஷனை கடந்து இருக்கிறது.விசுவாசம் மற்றும் வலிமை திரைப்படங்களுக்கு பின்னர் ரூ 200 கோடி கலெக்ஷனை அள்ளிய அஜித்தின் மூன்றாவது திரைப்படம் ஆனது துணிவு.அதனைப் போல் விஜய்யின் வாரிசு திரைப்படம் 12 நாட்கள் முடிவு உலக அளவில் ரூ 250 கோடி வசூலை கடந்து சாதனை படைத்திருக்கின்றது.
தற்பொழுது குறிப்பாக விடுமுறை தினமான நேற்றைய தினத்தை ஒட்டி வாரிசு திரைப்படம் அஜித்தின் துணிவு திரைப்படத்தை விட டபுள் மடங்கு கலெக்ஷனை அள்ளி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.அதன்படி வாரிசு திரைப்படம் நேற்று ஒரே நாளில் ரூ 8 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாகவும்,துணிவு திரைப்படம் ரூ 4.5 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.