மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஹீரோயினாக பிசியாக நடித்து வந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை பாவனா. கடந்த 2011ம் ஆண்டு வெளியான “ஆதாம் ஜான்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். இதற்கு காரணம் பிரபல நடிகர் ஒருவரின் தவறான அணுகுமுறைக்கு நடிகை பாவனா உள்ளானது தான்.
மேலும் இவர் தமிழில் தீபாவளி ஆர்யா ஜெயம் கொண்டான் அசல் போன்ற படங்களில் நடித்து இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் நடித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது. இவர் தனது பாய் ஃப்ரெண்டான கன்னட பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அசின், நயன்தாரா போல இவரும் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார் என்று கூறலாம்.
ஒரு தனிப்பட்ட நடிகரின் தவறான அணுகுமுறையால் தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இழந்த நடிகை பாவனா தற்போது அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு மீண்டும் என்னை ஒரு நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்க கிளம்பியிருக்கிறார்.
மேலும் தற்போது இவர் சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள கூடிய சமீபத்தியபுகைப்படத்தில் தன்னுடைய கொள்ளை அழகால் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார் நடிகை பாவனா.