நடிகர் விஜய் தமிழில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு நடிகர். இவர் சமீபத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் வெளியாகி உலக அளவில் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தளபதி 67 என்ற படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.
நடிகர் விஜயின் வாரிசு படத்தை விட தளபதி 67 படத்திற்கு தான் ஜெயின் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
தொடர்ந்து இவருக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள் திவ்யா ஏற்கனவே தெரிகின்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து இவரது மகன் சஞ்சய் வருடம் வேட்டைக்காரன் உள்ளிட்ட சில படங்களில் பாடல் காட்சிகளில் நடித்து திரைக்கு அறிமுகமானார்.
தற்பொழுது கன்னடா பல்கலை கழகத்தில் சினிமா எடுப்பது குறித்து படித்து வருகிறார். தொடர்ந்து தற்பொழுது குறும்படமும் எடுத்து வருகிறார் நடிகர் விஜயின் மகன் சஞ்சய்.கனடாவில் தனது சினிமா தொடர்பான படிப்பை முடித்துவிட்டு கூடிய விரைவில் சஞ்சய் தமிழில் படங்கள் இயக்குவது நடிப்பது போன்றவற்றில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இவர் நடிகர் விஜய் மகன் என்பதால் இவரது படமும் தமிழகத்தில் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.