தமிழில் தற்போது அசைக்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்த ஒருவர் தளபதி விஜய். இவர் படம் வெளி வந்தால் கதை நல்லா இருக்கிறதோ இல்லையோ வசூல் மட்டும் செய்துவிடும். அந்த வகையில் கடந்த வருடம் பீஸ்ட் ரிலீசாகி கலையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் வெற்றியடைந்தது.தற்பொழுது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் ரஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பொங்கல் விழாவை ஒட்டி ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுதும் வெளியிடப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் வாரிசு படத்தை விட தளபதி 67 படத்தில்தான் அதிகம் ஆர்வம் கொண்டு உள்ளனர். காரணம் அந்த படத்தை மாநகரம்,கைதி,மாஸ்டர்,விக்ரம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த வெற்றியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கம் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்க உள்ளார். தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் தமிழில் ஆக்சன் கிங் அர்ஜுன், மிஸ்கின் திரிஷா, கௌதம் வாசுதேவன், கேஜிஎப் 2 மாஸ் வில்லன் சஞ்சய் தத் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளிவரவில்லை. விக்ரம் திரைப்படத்தைப் போல இந்த படத்திற்கும் ப்ரோமோ வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் அப்டேட் பிப்ரவரி 1 2 3 ஆகிய தேதிகளில் வரும் என சமீபத்தில் நடந்த ஒரு மீட்டிங்கில் கூறியிருந்தார்.அதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
#Thalapathy67 😍💥 pic.twitter.com/5S8iWXrZpf
— Vijay Fan Latest Media (@Mrmoviecollect1) January 28, 2023
இதைத் தொடர்ந்து இந்த படத்தில் அப்டேட் ஆக்சன் கிங் அர்ஜுன் புதிய லுக் வைரல் ஆகி வருகிறது . அவர் இந்த கெட்டப்பில் தான் இந்த படத்தில் நடிப்பார் என்று சமூக வலைதளங்களில் தீ யாக பரவி வருகிறது.இதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.