Friday, March 24, 2023
Homeசினிமாபெருசாக வேண்டியது எல்லாம் பெருசா ஆச்சு நம்மளும் சம்பளத்தை பெருசாக்குவோம்? சம்பளத்தை உயர்த்தி உள்ள சுருதிஹாசன்.

பெருசாக வேண்டியது எல்லாம் பெருசா ஆச்சு நம்மளும் சம்பளத்தை பெருசாக்குவோம்? சம்பளத்தை உயர்த்தி உள்ள சுருதிஹாசன்.

சுருதிஹாசன் உலக நாயகன் கமலின் மூத்த மகள் இவர் ஆரம்ப காலத்தில் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் தனது திரைப்படத்துறை பணியை தொடங்கினார்.இவர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள இசை கல்லூரியில் இசை கற்றுள்ளார்.

ஹே ராம் என்ற படத்தில் முதல் முதலாக நடித்த அதன்பிறகு ஹிந்தி தெலுங்கு படத்தில் நடித்த 2011 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மற்றும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார் இதுவே இவருக்கு தமிழில் முதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது தமிழில் பெற்றார்.

தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் தனுஷின் 3 திரைப்படத்தில் நடிகையாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற திரைப்படங்களில் மாறி மாறி நடித்து வந்த சுருதிஹாசன் 2014 ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் பூஜை திரைப்படத்திலும் புலி மற்றும் வேதாளம் திரைப்படத்திலும் நடித்தார்.

இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் அஜித் விஷால் சூர்யாவுடன் படங்களில் நடித்துள்ளார்.என்னதான் இவர் தமிழில் முன்னணி நடிகருடன் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் பட வாய்ப்பு அவ்வளவோ கிடைக்கவில்லை தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடித்த அண்மையில் வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் வீரசிம்மா ரெட்டி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தது.இதனால் நடிகை இதிகாசனின் மார்க்கெட் தெலுங்கில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளது தற்பொழுது கூட the eye போன்ற படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கும் நிலையில் நடிகை சுருதிஹாசன் ஒரு படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதை குறித்து தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அண்மையில் இவர் நடித்த வெளிவந்த வால்டர் வீரய்யா மற்றும் வீர சும்மா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுக்கும் 2.5 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.இந்த தகவல் சக நடிகைகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.என்னதான் தமிழில் இவருக்கு மார்க்கெட்டில் ஆனாலும் தெலுங்கில் இவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கூட வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.

என்னதான் இவர் தமிழில் அதிக படங்கள் நடிக்காமல் இருந்தாலும் இவர் நடித்த ஒரு சில படங்களிலே தமிழகத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.தமிழகத்தில் உள்ள இவரின் ரசிகர்களுக்காக விரைவில் இவர் தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments