நடிகை அமலா பால் அவர்கள் தனது அம்மாவுடன் பழனி முருகன் கோயில் சென்று தரிசனம் செய்துள்ளார்.அமலா பால் சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக தமிழில் அறிமுகமானார். மைனா என்ற திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் வேட்டை,காதலில் சொதப்புவது எப்படி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
நடிகர் தனுஷின் வெற்றி படமான வேலையில்லா பட்டதாரி ஒன்று மற்றும் இரண்டு படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் தி டீச்சர் எனும் இந்த படத்தில் நடித்தார்.இந்தப் படத்தில் நடிகை அமலாபால் ஒரு பள்ளியின் டீச்சர ஆக பணியாற்றிய போது நாலு மாணவர்கள் அமலா பாலுக்கு மயக்க மருந்தை கொடுத்து அவரை கற்பழித்து விடுவார்கள். அந்த மாணவர்களை தேடி சென்று நடிகை அமலாபால் இந்த திரைப்படத்தில் பழி வாங்குவார்.
தொடர்ந்து படத்தில் மட்டும் நடிக்காமல் நடிகை அமலாபால் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் அமலா பால் ஒருவெப் சீரியஸில் தனது உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் படுக்கை அறை ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் என மாத்தி மாத்தி நடித்த வரும் அமலா பால் அவர்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.நடிகை அமலாபால் அவர்கள் எப்பொழுதும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான் பதிவிடுவார் ஆனால் இந்த முறை தனது அம்மாவுடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அமலா பால் வழக்கமாக விடுமுறை நாட்கள் என்றாலே போட்டோ சூட் நடத்துவது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது நடிகை அமலா பால் தனது தாயாருடன் பழனி முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து நெற்றியில் விபூதியுடன் கழுத்தில் மாலையுடன் புகைப்படத்தை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.