விஜே அஞ்சனா என்பவர் தென்னிந்தியா வீடியோ ஜாக்கி மற்றும் தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர். இவர் தமிழ் சேனல் ஆன சன் மியூசிக் தொகுப்பாளராக முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டார். பிறகு இவரை டைம்ஸ் ஆப் இந்தியாவின் படி அவர் மிகவும் விரும்பத்தக்க பெண்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டார்.
இவர் 2008 தொலைக்காட்சி ஆளுமை போட்டியான மிஸ் சின்னத்திரையில் தனது முதல் நடிப்பை வெளிப்படுத்தினார் அங்கு அவர் போட்டியில் வெற்றியாளராக வெளியிட்டார். பிறகு அவர் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார் மற்றும் பாட்டு டாட் காம், பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபிஸ், கொஞ்சம் உப்பு போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அதன் பிறகு கொஞ்சம் கரம், டான்ஸ் ஜோடி டான்ஸ் 3.0, நீங்களும் நாங்களும், கஃபே டீ ஏரியா, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ், ஞாயிறு கொண்டாட்டம், பிரியா விடு மற்றும் வாழ்த்துக்கள் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதன் பிறகு முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த அஞ்சனா பிரபல தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். அதன் பிறகு தற்பொழுது சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்கள் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வருகின்றார்.
இதன்பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு ருத்ராட்சம் என்ற ஆண் குழந்தையை பெற்றார்.
அதன் பிறகு உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் தற்பொழுது சிவப்பு நிற ஆடையில் மிரள வைக்கும் அளவிற்கு போட்டோ சூட் எடுத்து பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகின்றார்.