அட்லி என்பவர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் இவர் இயக்குனர் சங்கரிடம் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இதன் பிறகு இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்தப்பட்டார். அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முகப்புத்தகம் என்னும் குறும் படத்தையும் இயக்கி இருக்கின்றார்.
இதன்பிறகு இவர் தெறி என்ற திரைப்படத்திற்காக விஜய் விருது வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படமானது தீபாவளி பண்டிகை என்று வெளியிடப்பட்டு பெரிய ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பிகில் திரைப்படமும் மீண்டும் நடிகர் விஜய்யுடன் தீபாவளி பண்டிகை என்று வெளி விட்டு பெரிய வசூல் சாதனை படைத்தது.
பிறகு இவர் பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் பிரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்கள். இதன்பிறகு பிரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கின்றது என்று செய்தியை அட்லி அறிவித்திருக்கின்றார்.
இந்த விஷயத்தை அட்லி மகிழ்ச்சியாக அறிவித்து உள்ளார். இந்த செய்தியை கேட்ட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றார்கள்.இந்த செய்தியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடையே வாழ்த்துக்களை பெற்று வருகின்றார்கள் இருவரும்.