நடிகர் அஜித் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து துணிவு படத்தில் நடித்து வந்தார் இந்த திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.இன்று வரை வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
துணிவு திரைப்படத்தை இயக்குனர் h. வினோத் அவர்கள் இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடி தமிழகத்தில் மட்டும் 110 கோடிக்கும் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் வேட்டை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.வினோத் இயக்கிய அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் ஒரு கேங்ஸ்டர் ஆகவும் சமுத்திரகனி போலீஸ் ஆபீஸர் ஆகவும் நடிகை மஞ்சு வாரியார் அஜித்தின் குழுவில் உள்ளவராகவும் ஜான் கொக்கன் பேங்க் உரிமையாளராகவும் நடித்திருந்தனர்.
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வங்கிக் கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பண மோசடியை மையப்படுத்தி உருவாகியிருந்தனர்.இது மக்கள் மத்தியில் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
பல திரையரங்குகளில் இன்றும் முதல் நாள் போல நல்ல கூட்டத்தோடு இந்த திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தஞ்சாவூரில் உள்ள ஜிவி ஸ்டுடியோ மல்டிபிளக்ஸ் திரையில் துணிவு திரைப்படம் 13 நாட்களில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் கார்த்தி,ஜெயம் ரவி, விக்ரம், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி நடிகை நடிகர்கள் நடித்த இந்த திரைப்படத்தை விட துணிவு திரைப்படத்திற்கு வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட திரையரங்கு நிர்வாகமே ட்விட்டரில் அறிவித்துள்ளது.