அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நந்திதா ஸ்வேதா. அந்தத் திரைப்படத்தில் தனது அசட்டுத்தனமான நடிப்பை காட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.அட்டகத்தி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ஒரு தைரியமான விளையாட்டு வீராங்கனியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியின் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். குறிப்பாக அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசக்கூடிய குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்ற வசனத்தின் நடிகையாக மாறிவிட்டார். இந்த திரைப்படம் வெற்றியடைந்து இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது அந்த வகையில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் விஜயின் புலி என்ற திரைப்படத்தில் அப்பா விஜயவாக நடித்திருந்த விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆனால் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றக்கூடிய காட்சியில் மட்டும் தான் நடித்திருந்தார். ஆனாலும் முன்னணி நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது அனைத்து நடிகைகளின் ஆசையாக இருந்து வருகிறது. அதனால் அந்த திரைப்படத்தை ஏற்று நடித்தார்.அந்தத் திரைப்படம் விமர்சனம் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தது.
புலி திரைப்படத்தின் தோல்வியை சந்தித்த நந்திதா ஸ்வேதா அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி வந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து பட வாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் நந்திதா ஸ்வேதா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணைய பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் குட்டி கவனில் தனது வீட்டு மொட்டை மாடியில் நடனமாடிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதைத்தொடர்ந்து தற்பொழுது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிப்பது போல் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
குடும்பப் பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த நந்திதா ஸ்வேதா தற்பொழுது நீச்சல் உடையில் கவர்ச்சி கன்னியாக அனைவரும் கண்களில் தோற்றமளிக்கிறார். இதனால் இவருக்கு விரைவில் படம் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.