நடிகர் சிம்பு மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பத்து தல எனும் படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டிஜே, ஜோ மல்லூரி, அனுசித்ரா,ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்கள் முக்கிய இடத்தில் நடித்து இருக்கின்றனர்.
தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பை நிறைவடைந்ததாக பாடல் குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. இந்த படத்தில் நடிக்கும் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் தங்களது டப்பிங் பணியை முடித்ததாக தெரிவித்திருந்தனர். தற்போது இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில காரணங்களாகவே இந்த படங்கள் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இந்த படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிம்புவின் பத்து தல என்ற இந்த படம் வரும் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த முஃப்டி என்ற படத்தின் ரீமேக்காக உருவாக்கியுள்ளது. இந்த படத்தின் ரீமேக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் அப்டேட் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் இடம் பெற்றுள்ள படத்தின் முதல் பாடலை வரும் மூன்றாம் தேதி வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெரும் என படக்குழுவினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.