நடிகர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நடிகர் விஜயின் மனைவி வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு தனது பிள்ளைகளுடன் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து.
அதாவது நடிகர் விஜய் அவர்கள் தன்னுடன் நடித்த ஒரு நடிகை உடன் தவறான உறவில் இருப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பல பல கிசுகிசு தகவல்கள் வந்தது. ஆனால் இது அனைத்தும் உண்மை அல்ல அந்த நடிகை தான் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த 4 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என தகவல்கள் தற்போது வெளிவந்து இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர். நடிகர் விஜய்க்கும் அந்த நடிகைக்கும் எந்த ஒரு தவறான உறவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய்க்கு அவரது மனைவிக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லையாம் நடிகர் விஜய்வும் அவருடைய மனைவி சங்கீதாவும் சென்னையில் உள்ள அவர்களின் வீட்டில் தான் இருக்கிறார்களாம் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்லவில்லை என்றுதகவல் வெளியாகி இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது.
இந்த சர்ச்சைக்கு எல்லாம் காரணம் நடிகர் விஜய் அவர்கள் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தனது மனைவி சங்கீதாவை அழைத்து வராததால் நெட்டிசன்கள் இவ்வாறு தவறான தகவல்களை பரப்பி உள்ளனர்.தற்பொழுது நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படம் சூட்டிங் காக காஷ்மீருக்கு நேற்று பட குழுவினருடன் சென்றுள்ளனர்.