ஐஸ்வர்யா ராஜேஷ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யார் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக முதன்முதலில் தனது பணியை ஆரம்பித்தார்.இதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் பிறகு நீதானா அவன் என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் முதன் முதலில் நடித்தார்.
பிறகு இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். பிறகு தனுசுடன் வட சென்னை திரைப்படத்தில் பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிறகு கனா திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து ரசிகர்கள் இடையே புகழ் பெற்று இருந்தார்.
இவர் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தமிழ் அரசு திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் குரு பட்ஜெட் திரைப்படங்களில் நடித்த தேசிய விருது நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருகின்றார்.
தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்த வருகின்றார் இந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிசம்பர் 30ஆம் தேதி வெளியான டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்தத் திரைப்படத்தில் இவர் டிரைவர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படமானது சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகி முதல் காட்சியிலே படம் கலவையான விமர்சனத்தை பெற்றது இதனால் இந்த திரைப்படத்தில் தியேட்டரில் இருந்து சில நாட்களிலே தூக்கப்பட்டதால் குறைவான வசூல் பெற்றது.
இந்த நிலையில் தற்பொழுது ஓடாத திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் சக்சஸ் பார்ட்டி கொண்டாடி வருகின்றார்கள். யாரையும் ஏமாற்றுவதற்கு பெரிய நடிகர்களைப் போல் சக்ஸஸ் பாட்டி வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.