கடந்த 1990ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் வாராங்கல் மாவட்டத்தில் பிறந்த இவர் மாடல் அழகியாக தனது ஊடக பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான “அவ்” படத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா கஸன்ட்ரா ஆகிய மெகா கூட்டணியோடு நடித்தார்.
தமிழில் ‘ஓய்’ படத்தில் நடித்தவர், அதன் பின் தற்போது ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் ஜிவி பிரகாஷோடு நடித்து வருகிறார். தற்போது நெட்பிளிக்ஸ் வெளியாகி இருக்கும் “பிட்ட காதல் என்ற அந்தாலஜி’ படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களிலும் மும்முரமாக நடித்து வரும் நடிகை ஈஷா ரெப்பா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது ஜிம் பனியன் அணிந்து கொண்டு உடல் முழுவதும் தெளிவாக தெரியும்படி உள்ள இந்த புகைப்படம் சில ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.