கார்த்திக் என்பவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார் இவர் முதன் முதலில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, பிரியாணி, மெட்ராஸ் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகின்றார்.
இவருடைய நடிப்பு திறமையினால் மூன்று தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவற்றை வென்றார். பிறகு இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
இதனால் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்பொழுது இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன். சர்தார், விருமன் போன்ற மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்று கணக்கில் அடங்காத பாக்ஸ் ஆபிஸ் வசூலையும் குவித்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ராஜ்முருகன் இயக்கத்தில் தற்பொழுது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி இவருடைய ரசிகர் வினோத் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று அந்த மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட கார்த்திக் உடனே ரசிகரின் வீட்டிற்கு சென்று குடும்பத்திடம் ஆறுதல் தெரிவித்தார். ரசிகர் வினோத் என்பவர் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்திக் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளர் ஆவார்.
மறைந்த தன் ரசிகரின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் எங்களின் அண்ணன் கார்த்தி.#Karthi25 #Karthi #Chennai #Japan #Thiruvanmiyur #KarthiFan @Karthi_Offl @Suriya_offl @prabhu_sr @rajsekarpandian pic.twitter.com/OOdjF8ot9u
— ꧁♥︎ Pavithran Rm ♥︎꧂ (@PavithranRm) January 29, 2023
இந்த செய்தியை ரசிகர்கள் அனைவரும் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.