பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் சின்னத்திரை தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானார்.சீரியலைத் தொடர்ந்து மேயாத மான் படத்தில் வெள்ளித்திரை நடிகையாக அறிமுகமானார்.மேயாத மான் படத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் எனும் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி வருகிற நிலையில் சமீபத்தில் ஏசி ஆர் பகுதியில் ஒரு வீட்டை கட்டி குடியேறினார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் எப்படி வந்தேன் என்றும் அதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க கடினமாக உழைத்தால் தான் பணம் கிடைக்கும் அதற்காக தான் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார். படங்களில் நடிக்க பணத்தை சம்பாதிப்பதை விட நல்ல கதையை நடிக்க வேண்டும் என முடிவெடுப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு பிரியா பவானி சங்கர் பணத்திற்காக மட்டும்தான் நடிப்பதாக கூறியிருக்கிறார் என்று செய்திகளை பரப்பி உள்ளனர்.இந்த செய்தியை அறிந்த பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
🙏🏼 https://t.co/1qM68L8xBc pic.twitter.com/3Xu6wNvnQd
— Priya BhavaniShankar (@priya_Bshankar) January 19, 2023
அந்தப் பதிவின் ஆரம்பத்தில் மாப்பிள்ளை சொம்பு கொடுத்தால் தான் தாலி கட்டுவாராம் என்ற வசனத்திற்கு போல் மீடியா நடந்து கொள்கிறது என்று ஆரம்பித்து நான் பணத்திற்காக மட்டும்தான் சினிமாவில் நடிக்கிறேன் என்று சொல்லவே இல்லை அப்படி சொல்லி இருந்தாலும் என்ன தப்பு எல்லோரும் பணத்திற்காக தான் வேலை பார்க்கிறோம் என்றும் நடிகர் நடிகைகள் காசு வாங்குவதை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று அந்தப் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.