இவர் ஆரம்பத்தில் ஒரு கல்லூரியில் மாடலாக வேலை செய்து கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு கில்லி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.தொடர்ந்து இவர் கன்னடம்,தெலுங்கு,ஹிந்தி,தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் உலகநாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்களில் மிகவும் பிசியாக நடித்த வருகிறார்.இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் தனது ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என்று உருக்கமாக கூறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இவர் கூறிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.அதில் அவர் என் குடும்பத்திற்கும் சினிமாவிற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. அதனால் நான் இதை சொல்லும் பொழுதே உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் கடந்து வந்த பாதை எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்றும் இதற்கு மேல் ஒன்னும் சொல்லத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
சினிமா துறையில் எந்த ஒரு பிணைப்பும் இல்லாத ஒருவர் சினிமாவில் நுழைந்து ஜெயிப்பது என்பது கடினமான விஷயம் என்பது நடிப்பவர்களுக்கு மட்டுமில்ல சினிமாவை பார்ப்பவர்களுக்கும் தெரியும். அந்த அளவுக்கு ஒரு நடிகர் நடிகையின் நடித்து விட்டால் அவர்களின் வாரிசு அடுத்தடுத்து அப்படியே சினிமாவில் நுழைந்து விட முடியும் ஆனால் சினிமாவில் எந்த ஒரு பிணைப்பும் இல்லாதவர்கள் கஷ்டப்பட்டு தான் நுழைய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து நான் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு முன்பு மும்பையில் எங்கெங்க சினிமா சூட்டிங் நடக்கிறதோ மற்றும் நடிகைகள் தேர்வுகள் எங்கெங்கே நடக்கிறதோ என்பதை நான் முன்பே குறித்து வைத்துக் கொள்வேன். எனது பேக்கில் எப்பொழுதும் உடைகள் இருக்கும். நடிகைகள் தேர்வு செய்யும் இடத்திற்கு செல்லும் பொழுது எனது பேக்கில் உள்ள உடையை காரிலேயே மாற்றிக் கொள்வேன். அதிலும் குறிப்பாக காரில் பேண்ட் மாற்றுவது என்பது கடினமாக இருக்கும் ஆனாலும் காருக்குள்ளே பேண்ட் கழட்டி மாட்டிக் கொள்வேன். ஏனென்றால் இதற்காக தனியாக ரூம் போட்டால் அதற்கு கூடுதலாக செலவாகிவிடும் அந்த வசதி என்னிடம் இல்லை எனவே காரில் எனது உடைகளை மாற்றிக் கொள்வேன்.
அது மட்டுமில்லாமல் சில படங்களில் என்னை நடிகையாக நடிக்க வைக்கிறேன் என்று முன்பே ஒப்புதல் கொடுப்பார்கள் ஆனால் திடீரென்று நடிகைகள் மாற்றம் செய்யப்பட்டு விடும். தொடர்ந்து வேற நடிகையே ஒப்பந்தம் செய்துவிட்டு உங்களை படத்திலிருந்து நீக்கி விட்டோம் என்று கூறுவார்கள் அப்போதெல்லாம் எனக்கு உலகம் இரண்டு போனது போல தெரியும். ஆனால் இதெல்லாம் எனக்கு ஒரு போராட்டம் போல் இல்லை.
ஏனென்றால் எந்த ஒரு விஷயமும் கஷ்டப்படாமல் கிடைத்து விடாது எனக்கு சினிமா துறையில் பின்னணியில் யாரும் கிடையாது அதனால் நான் போராடி தான் ஆக வேண்டும். அப்படி போராடி தான் வாய்ப்பு பெற்றேன் வெளிப்படையாக தனது ஆரம்ப கால வாழ்க்கை கஷ்டங்களைப் பற்றி நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.