நடிகர் அஜித் துணிவு படத்தின் ரிலீஸ் க்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க இருந்தார். சமீபத்தில் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதில்லை என்று பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. படத்தின் கதைகளும் நடிகர் அஜித்துக்கு பிடிக்கவே இல்லாததால் இந்த முடிவை அஜித் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனால் நடிகர் அஜித் விக்னேஷ் சிவனை ஏமாற்றிவிட்டார் என்று சர்ச்சைக்கு ஏகே 62 ஐ தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்களில் இவர்கள் கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தை யார் இயக்குனர் என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் பல இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் உலக அளவில் மாஸ் காட்டிய கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந் மற்றும் அஜித்தின் வெற்றி பெற இயக்குனர் விஷ்ணுவர்தன் பெயரும் அடிபட்டு வந்தது.
அந்த வகையில் பிரசாந்த் க்கு ஏற்கனவே மூன்று படங்கள் இருப்பதால் அவரால் இப்பொழுது அஜித் கூட்டணி இணைய முடியவில்லை ஆனால் விரைவில் அஜித் மற்றும் பிரசாந்த நீல் கூட்டணியில் ஒரு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் முன்னாள் இயக்குனர் ஹச் வினோத் அவர்கள் ஏகே 62 படத்தை பற்றி ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை அளித்துள்ளார்.
அந்தப் பதிவில் நடிகர் ரஜினிகாந்தின் 1980ல் வெளியான பில்லா படத்தின் ரீமேக்காக 2007 ஆம் ஆண்டு நடிகர் அஜித் மற்றும் விஷ்ணுவர்தன் கூட்டணியில் பில்லா என்ற படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அஜித் கரியரில் அமைந்தது.இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினியின் 1995 ஆம் ஆண்டு வெளியான பாட்ஷா படத்தின் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாகவும் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக நடிகர் அஜித்து அவர்கள் ரஜினியிடம் கேட்டு சம்மதம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை H.வினோத் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த தகவல் இன்னும் அஜித் தரப்பில் இருந்தும் இயக்குனர் தரப்பில் இருந்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. ஆனால் கூடிய விரைவில் அஜித் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.