போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா கணவர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார். தொடர்ந்து இந்த திரைப்படத்தை லைக் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் சந்தானமும் ஒரு முக்கிய இடத்தில் நடிப்பதாகவும் இவரை தொடர்ந்து அரவிந்த் சுவாமியும் நடிப்பதாகவும் அறிவித்திருந்தனர்.இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாதத்தில் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஏகே 63 படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதைத் தொடர்ந்து அந்த படத்தை இயக்குனர் அட்லி அவர்கள் இயக்குவதாகவும் இசை புயல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் உறுதியானால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடிகர் அஜித்தின் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிற என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இயக்குனர் அட்லி நடிகர் விஜயின் தெறி,மெர்சல்,பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
தொடர்ந்து தற்பொழுது சாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தை இயக்கு என்ற ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது ஏகே 63 படத்தையும் அட்லீய இயக்கம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்தக் கூட்டணி உருவானால் அஜித் குமாரின் கரியரில் ஒரு பிரம்மாண்டமான படம் உருவாகும் என கூறப்படுகிறது.இயக்குனர் அட்லி விஜயாவுக்கு வெற்றி படங்களை கொடுத்து இருப்பதால் அஜித் படத்தை இயக்குவாரா என்று எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளது.
இவற்றையெல்லாம் உடைக்கும் வகையில் ஏற்கனவே நடிகர் அஜித்தின் வாலி படத்தை இயக்கிய எஸ் ஜே சூர்யா அவர்கள் விஜயவை வைத்து குஷி என்ற படத்தை கொடுத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து திருப்பாச்சி,சிவகாசி போன்ற விஜயவுக்கு இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பேரரசு நடிகர் அஜித்தின் திருப்பதி படத்தை இயக்கி உள்ளார். அதனால் இவரும் இந்த படத்தை இயக்குனர் என எதிர்பார்க்கப்படுகிறது.