சமந்தா மாடலிங் துறையில் மூலமாக அறிமுகமாகி தற்பொழுது திரைப்படம் நடிகையாக உள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தொடர்ந்து முன்னணி நடிகை என்ற நிலையில் உள்ளார் சமந்தா.
தொடர்ந்து சமீபத்தில் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார் சமந்தா தற்போது உடல்நிலை தேறி மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் இவர் நடித்த யசோதா என்னும் திரைப்படம் இந்தியாவில் ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது.இதைத் தொடர்ந்து சமந்தா விஜய் தேவர் கொண்டவுடன் குஷி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமந்தா முன்னணி நடிகையாக இருந்தாலும் அவரின் குடும்ப படங்கள் அவ்வளவா வெளியே வராமல் தான் இருக்கும். அப்படி இருக்கும் நிலையில் அவரது அம்மா அப்பா போன்றவர்களின் ஒரு சில புகைப்படங்களை மூலம் காண முடிகிறது.
தற்பொழுது சமந்தாவின் சகோதரருடன் எடுக்கப்பட்ட போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை சமந்தா பிரபல முன்னணி நடிகர் நாகா சைத்தானை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த திருமணத்தின் போது தனது சகோதரருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது