இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பவர். வடிவழியாக தனது தொழில் வாழ்க்கைய ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இலியானா 2006 ஆம் ஆண்டு கேடி எனும் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.
ஆனால் அந்த திரைப்படம் அவர் பெயர் சொல்லும் படமாக அவருக்கு அமையவில்லை.தொடர்ந்து தெலுங்கிலே நடித்துக் கொண்டு வந்த இலியானா 2012 ஆம் ஆண்டு நடிகர் விஜயின் நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் புகழ்பெற்றார் இலியானா.
மீண்டும் தெலுங்கு ஹிந்தி கன்னடம் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார் இருப்பினும் இவர் நடித்த அந்த நண்பன் படத்தில் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவருக்காகவே அந்த திரைப்படத்தில் இவர் பெயர் கொண்ட ஒரு பாடல் அமைந்திருந்தது அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படி இருக்கும் நிலையில் இலியானா அவர்கள் சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவலை இலியானா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் விரைவில் குணம் பெற வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
இப்படி இருக்கும் நிலையில் இலியானா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் உடல்நிலை குறித்து அப்டேட்டை கொடுத்துள்ளார். இலியானா அவர்கள் தன்னை மருத்துவர்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமில்லாமல் உடல்நிலை தேறி வருவதாகவும் கூறியுள்ள இலியானா ரசிகர்கள் தன் மீது கொண்ட அக்கறைக்கு நன்றி என தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். இன்னும் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.