கன்னட சினிமா-வின் Rocking Star என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் முழு பெயர் “நவீன் குமார் கவுடா”.இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார்.
அதனை தொடர்ந்து கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார்.இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான KGF திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்ல வேண்டும் .
ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் 200-கோடி வசூலை தாண்டி மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இவர் தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக வலம் வருகிறார் .இதனிடையே இவர் நடிகை ராதிகா பண்டிட்டு என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இ.ருக்கும் யாஷ் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீ.டியோக்களை பகிர்ந்து வருகிறார்.