ஆர் ஜே பாலாஜி சென்னையைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர். இவர் படங்களில் தனது நகைச்சுவையான பேச்சுகளின் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.தொடர்ந்து இவர் கிரிக்கெட்டில் கமெண்ட்ரி கேட்பதற்காகவே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இவர் ஐபிஎல் இல் கொடுக்கும் நக்கலான கமெண்ட்கள் மற்றும் பேச்சுக்கு இவருக்கு தனி ரசிகர்களை உள்ளார்கள். குறிப்பாக ஐபிஎல் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் இவரது கமெண்டரி இருந்தால் மட்டும் கிரிக்கெட்டில் சுவாரிசும் இல்லை என்றாலும் இவர் பேச்சினால் அந்த கிரிக்கெட்டை அனைவரும் பார்த்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு இவரது நகைச்சுவை பேச்சு ரசிகர்களை ஈர்த்து உள்ளது.
இவர் சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார் சில படங்களை இயக்கியும் இருக்கிறார்.அந்த வகையில் இவர் இயக்கி நடத்த உள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சாமி வேடத்தில் நடித்திருந்தார்.நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இருந்த அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
தொடர்ந்து சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான வீட்டிலே விசேஷம் என்ற திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.இந்நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி அவர்கள் இயக்கத்தில் இவர் நடித்த எல் கே ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகங்கள் இயக்க இருப்பதாக அப்டேட் கொடுத்துள்ளார்.
இவர் எந்த பாடத்திலும் ஒரே மாதிரி நடித்து விடாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் உலகநாயகன் கமலஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்களில் நடிக்க எனக்கு ஆசையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆர் ஜே பாலாஜி யோகேஷ் கனகராஜ் இன் எல் சி யூ போல தான் நடித்த எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஒன்றாக இணைத்து இந்த இரண்டு படத்தின் இரண்டாம் பாகங்கள் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.