Tuesday, March 28, 2023
Homeசினிமாமாரி 2 திரைப்பட குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்.!!அதிர்ச்சியில் இருக்கும் திரையுலகினர்.!!

மாரி 2 திரைப்பட குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்.!!அதிர்ச்சியில் இருக்கும் திரையுலகினர்.!!

ஈ.ராமதாஸ் அவர்கள் ஒரு புதிய திரைப்பட இயக்குனர்,கதை எழுத்தாளர் மற்றும்  நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலேயே பணியாற்றியுள்ளார்.

இவர்  தமிழில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கின்றார். இவருக்கு 66 வயது ஆகின்றது இவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் இவர் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டதால் சென்னைக்கு வந்தவர்.ஆரம்ப காலகட்டத்தில் எழுத்தாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் இயக்குனராக களமிறங்கினார்.

இவருடைய இயக்கத்தில் ராஜா ராஜா தான், சுயம்வரம், ராவணன், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற திரைப்படங்கள் இயக்கியிருக்கின்றார். அதனைப் போல் எழுத்தாளராகவும் ஏராளமான திரைப்படங்களில் பணியாற்றி இருக்கின்றார். கடந்த சில வருடங்களாக நடிப்பிலும் கவுரவம் செலுத்தி வந்த நிலையில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து  வந்தவர்.

குறிப்பாக இவர் சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, நயன்தாராவுடன் அறம், விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா, தனுஷ் உடன் மாரி 2 போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இதனிடையே நேற்று இரவு இவருக்கு ஏற்பட்ட மாற அடைப்பு காரணமாக இவர் காலமானார்.அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் மறைந்த செய்தியை அவருடைய மகன் கலைச்செல்வன் சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி இருக்கின்றார். இது குறித்து அவர் பதிவிட்ட: “எனது தந்தை இயக்குனர், எழுத்தாளர், நடிகர் ஈ.ராமதாஸ் மாறா அடைப்பால் இறைவனடி சேர்ந்தார்.அவரது இறுதி சடங்கு 24/01/2023  காலை 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருக்கின்றது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments