மாளவிகா மோகன் ஒரு இந்து திரைப்பட நடிகை ஆவார். இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மட்டும் தமிழ் ஆகிய திரைப்படங்களில் நடித்த வருகின்றார்.இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதன்பிறகு இவர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார்.
பிறகு இவர் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு படுதோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது விக்ரம் நடித்த வரும் தங்களான் என்ற திரைப்படத்தில் மாளவிகா நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்காக கடுமையான பயிற்சிகளை கூட மாளவிகா மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது நடிகை மாளவிகா அடுத்ததாக பாகுபலி திரைப்பட நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடிக்க இருக்கின்றார்.
இந்தத் திரைப்படம் மாருதி இயக்கத்தில் உருவாகும் என்றும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க இருக்கின்றார் இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.
இதனை மாளவிகா மோகனன் சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் கலந்துரையாடிய போது கூறி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவே இவர்கள் இருவரும் இணைந்து முதன்முறையாக நடிக்கும் திரைப்படமாகும் இந்த திரைப்படம் மாளவிகா மோகன் நல்ல வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.