மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 90s தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக அறியப்பட்டார். இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து இவர் நடிகர் ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முத்து திரைப்படம் ஜப்பானில் வெற்றிகரமாக ஓடியது இவருக்கு இந்தியாவை தொடர்ந்து ஜப்பானிலும் ரசிகர்கள் ஏராளமானார்கள். படங்களைத் தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களையும் நடித்துள்ளார்.
இவர் வீரா, வானத்தைப்போல, வில்லன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித்,ரஜினிகாந்த்,விஜயகாந்த் போன்றவர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.குறிப்பாக இவர் ரஜினிகாந்த் உடன் நிறைய திரைப்படங்கள் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர் கடந்த ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார் அவர் மகள் நைனிகா தனது 5 வயதில் தெறி என்ற திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்திருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஜூன் 28 ஆம் நாள் இவரது கணவர் வித்தியாசாகர் உடல் நலக்குறை காரணமாக மரணமடைந்தார். இவர் கணவர் இறந்ததற்கு பிறகு சோகத்தில் இருந்து வந்த இவர் அவ்வப்போது தனது தோழிகள் சங்கவி,ரம்பாவிடம் நேரத்தை செலவிட்டு வந்தார் அதன் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகை மீனா அவர்கள் தனது கணவர் மறைவுக்குப் பிறகு முதல் முறையாக டிவி ஷோவுக்கு வந்திருக்கிறார்.விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் சோவிற்கு நடிகை மீனா கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.
அதிரடி Performance.. 🔥
சூப்பர் சிங்கர் Season 9 – இன்று மற்றும் நாளை மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 pic.twitter.com/FYJdbASav6
— Vijay Television (@vijaytelevision) January 28, 2023
90ஸ் பாடல்கள் சுற்றுப்போட்டி நடக்கும் நிலையில் அதற்கு கெஸ்ட் ஆக குஷ்பூ மற்றும் மீனா வந்திருக்கின்றார்கள் குஷ்பூ மற்றும் மீனா இவர்கள் இருவரும் நடிகர் சரத்குமாரின் நாட்டாமை படத்தில் இணைந்து நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியின் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.