நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு வாடகை தாயின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் தீ யாக பரவி வந்தது. திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா நடிக்காமல் இருந்தார். தனது கணவர் தயாரிப்பில் கனெக்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இது கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.திருமணத்திற்குப் பிறகு படங்களில் அதிகம் நடிக்காமல் தன் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதிலும் படங்களை தயாரிப்பதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து நயன்தாராவின் கணவர் நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.இந்தத் திரைப்படம் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து எடுக்க இருப்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதனால் நடிகை நயன்தாரா சமீபத்தில் நடிகர் அஜித்தின் துணிவு படத்தை பார்த்துவிட்டு நடிகர் அஜித்துடன் ரகசிய சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பில் துணிவு படத்தை குறித்தும் தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள அஜித்தின் அடுத்த படத்தை குறித்தும் பேசி உள்ளாராம்.
அதிலும் குறிப்பாக Ak62 அஜித்தின் லுக் மற்றும் நடனம் அனைத்துமே புதுமையாக இருக்க வேண்டும் என்று நயன்தாரா முடிவு எடுத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் இந்த படத்தின் கதையில் நடிகை நயன்தாரா அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
எனவே இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஹீமோ குரேஷி என இவர்கள் பேரும் இந்த பட்டியில் இருக்கிறது இந்த திரைப்படத்தில் யார் ஹீரோயினியாக நடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இன்னும் யாரு ஹீரோயினி என்று தெரியவில்லை ஆனால் இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் அரவிந்த்சாமி மற்றும் காமெடி நடிகர் சந்தானம் இந்த படத்தில் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி இருக்கிறது. தொடர்ந்து இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
குறிப்பாக இந்த படத்தை தன் கணவர் இயக்க இருப்பதால் நடிகர் அஜித்துடன் ரகசிய மீட்டிங் போட்டு பல்வேறு விஷயங்களை மற்றும் ஆலோசனைகளை கேட்டு வருகிறார்.