நஸ்ரியா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது நடிகையாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்தார் பின்னர் நடிகை ஆனார். 2006 ஆம் ஆண்டு பளுங்கு என்ற திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தமிழில் நேரம், ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படங்களை நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி படம் இவரது பட வாய்ப்பு உயர்த்தியது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு படங்கள் நடித்திருந்தாலும் இந்தியா முழுவது இவரை எக்ஸ்ப்ரஸ் குயின் என்று அழைத்து வருகிறார்கள். சில இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
தொடர்ந்து மலையாள முன்னணி இயக்குனரான பசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலை நஸ்ரியா 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணம் நஸ்ரியாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருமணத்திற்குப் பிறகு நடிகை நஸ்ரியா அவர்கள் படங்கள் நடிக்காமல் இருந்தார். அதைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் இவரது கணவர் பகத் பாசில் கூட ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படம் தமிழில் மறந்தவன் என்ற பெயரில் வெளிய வந்தது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் நடிகர் நானியுடன் அடடே சுந்தரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களால் கவரப்பட்டது.தொடர்ந்து இவரது கணவர் பகத் பாசில் தமிழில் விக்ரம் எனும் திரைப்படத்தில் ஒரு முக்கிய இடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனால் இவரது கணவருக்கும் தமிழில் தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இப்படி இருக்கும் நிலையில் படங்களில் நடிக்காமல் இருந்தாலும் நடிகை நஸ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போ தனது புகைப்படங்களை வெளியிடுவதே வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து நடிகை நஸ்ரியா வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தனது கணவர் பகத் பாசிலுடன் வட அமெரிக்காவில் உள்ள மொரோக்கோ நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் அங்கு தனது கணவருடன் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.அதைத்தொடர்ந்து மராகேஷ் நகரில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
அனைவரும் அவர் வெளியிட்ட லைக் கொடுத்து வருகின்றனர்.2023ல் இந்த பையனுடனான முதல் பதிவு அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்துடன் இந்த வாக்கியத்தை இட்டுள்ளார். தற்பொழுது நடிகை நஸ்ரியாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.