Tuesday, March 28, 2023
Homeசினிமாபிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்.!படுக்கை அறையில் கீழே விழுந்து திடீர் மரணம்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்.!படுக்கை அறையில் கீழே விழுந்து திடீர் மரணம்

வாணி ஜெயராம் திரைப்பட பின்னணி பாடகி ஆவார் இவரின் இயற்பெயர் களவாணி என்பதாகும். இவர் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

இவர் மூன்று முறை தேசிய விருதும் பத்மா பூசன் விருது பெற்றுள்ளார்.திரைப்படங்களைத் தொடர்ந்து இவர் தனியாகவே ஆல்பம் மற்றும் பக்தி பாடல்களை பாடியுள்ளார். அது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று பல இசை நிகழ்ச்சியை வழங்கி உள்ளார். இவர் ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்பட்டார்.

இவரது குரலில் நித்தம் நித்தம் நெல்லு சோறு,மல்லிகை என் மன்னன் மயங்கும் என் கல்யாண வைபோகம் உன்னோடு தான் போன்ற பாடல்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்காமல் உள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் 78 வயதில் கடந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீரென்று உயிரிழந்துள்ளார். அவர் படுக்கை அறையில் கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டதால் உயிரிழந்துள்ளார் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து இவருடைய மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் பலர் தங்களுடைய எண்ணங்களை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments