நடிகர் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் சமுத்திரகனி ஜான் கொக்கன் ஆகியோர்களின் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி துணிவு படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் வங்கி கொள்ளை மற்றும் வங்கியில் நடக்கும் பணமோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு கேங்ஸ்டர் அஜித்துடன் அஜித்தின் குழுவில் நடிகை மஞ்சுவாரியரும் நடித்திருந்தனர். ஜான் கோக்கன் வங்கியின் உரிமையாளராகவும் சமுத்திரகனி போலீசாகவும் நடித்திருந்தனர்.
தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.கடந்த 38 வருடங்களால் இந்த திரையரங்குகளில் ஓடிய படங்களை விட இந்த திரைப்படம் அதிக வசூலை செய்து முதலிடத்தில் உள்ளது.
அந்த வகையில் தமிழில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சில இயக்குனர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் விட திரைப்படம் அதிக வசூலை செய்தது.உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேஜிஎப் 2 திரைப்படம் நடத்திய வசூல் வேட்டையை 13 நாட்களில் முடி எடுத்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த தகவலை ஜீவி ஸ்டுடியோ சிட்டி மல்டிபிளக்ஸ் தஞ்சாவூர் திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.ஜி ஸ்டூடியோ சிட்டி மல்டிபிளக்ஸ் தஞ்சாவூர் திரையரங்கம் ஏற்கனவே பொன்னியின் செல்வனின் முழு வசூலை துணிவு திரைப்படம் இரண்டே வாரங்களில் பெற்றுள்ளது என்று தனது சுட்டெர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது துணிவு திரைப்படம் அதிக வசூல் பெற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதால் அஜித்தின் ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.