ரஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படம் நடிகையாக அறிமுகமாகி தற்பொழுது தெலுங்கு,தமிழ்,ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து கீதா கோவிந்தம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். தெலுங்கில் பல படங்களை நடித்து வந்த இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.2021 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தில் நடிகையாக தமிழில் அறிமுகமானார்.இவர் தமிழ் தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவர் ஒரு நிகழ்ச்சியில் தனக்கு நடிகர் தளபதி விஜயுடன் நடிக்க வேண்டும் என்பது ஆசை என்று கூறியுள்ளார்.இவரது ஆசை போல் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார்.அந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா அவர்கள் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11ஆம் தேதி வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நடிகை ரஷ்மிகா இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டும்தான் நடித்துள்ளார் என ரசிகர்கள் விமர்சனங்கள் செய்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ரஷ்மிகா நடித்திருக்கவே தேவையில்லை என்றும் இணையத்தில் பரப்பி வந்தனர்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய் அவர்கள் வாரிசு வெற்றி பெற்றதை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் அது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மந்தனா ஊடக பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த பேட்டியின் போது பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் நீங்கள் தான் வாரிசு திரைப்படத்தில் அதிக காட்சிகளில் வரவில்லையே ஏன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள். இதற்கு நீங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கேட்டுள்ளார்.அதற்குப் பதிலளித்த ரஷ்மிகா இந்த படத்தில் ஒரு சில காட்சி மற்றும் இரண்டு பாடலுக்கு மட்டும் தான் வருவேன் என்று எனக்கு தெரியும் அப்படி இருந்தும் இந்த படத்தில நடிகர் விஜய்க்காக மட்டும் தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நான் நடிகர் தளபதி விஜயின் தீவிர ரசிகை அவருடன் ஏதாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பது பல நாள் ஆசை மற்றும் கனவாக இருந்தது அது வாரிசு திரைப்படத்தின் மூலம் தற்பொழுது நிறைவேறி உள்ளது. என்று அவர் ஓப்பனாக பதில் கூறியுள்ளார்.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.