கன்னடா திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் ரஷ்மிகா மந்தனா. 2018 ஆம் ஆண்டு கீதா கோவிந்தம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டவுடன் நடித்திருந்தார். முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக உருவாக்கப்பட்ட அந்த திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் ரஷ்மிகா மந்தனா புகழ்பெற்றார். தொடர்ந்து அடுத்தடுத்து கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார் 2021 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற ரஷ்மிகா மந்தனாவை இளைஞர்கள் அனைவரும் தனது கிரஸ் என்று அழைத்து வந்தனர்.இப்படி இருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பட வாய்ப்புகள் குவிந்து வந்தது ரஷ்மிகா மந்தனாவிற்கு. 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் புகழ்பெற்ற முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற ரஷ்மிகா மந்தனா
மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜயுடன் நடிக்க வேண்டும் என்பதே எனக்கு ஆசை என பல நேர்காணலில் கூறியிருந்தார். இவரது ஆசைக்கு இணங்க இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு என்ற திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த திரைப்படம் பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படி இருக்கும் வேளையில் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு வருகிறார் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர். நடிகர் விஜய் தேவர் கொண்டவை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டு வந்தது.
இவர்கள் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமாகி இருவரும் காதலித்து வருவதாக சில தகவல்களை பரப்பி வருகின்றனர்.ஆனால் இந்த விவகாரத்திற்கு ரஷ்மிகா மற்றும் விஜய் தேவர் கொண்ட மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் இருவரும் ஒன்றாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக தகவல்கள் பரவின.இந்த செய்தி அறிந்த ரஷ்மிகா மந்தனா அதை பற்றி பேசி உள்ளார் அவர் எனது நண்பர் அவருடன் டூர் சென்றால் என்ன தவறு என்று ஆவேசமாக பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.