பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படங்கள் திரைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வெறும் எதிர்பார்ப்புகள் இருந்தது. எதிர்பார்ப்புகளுடன் வெளியே வந்தஇரண்டு திரைப்படமும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டு வருகிறது.இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சாருக் கான் சில வருடங்களுக்குப் பிறகு நடிகராக நடித்துள்ளார். பதான் என்ற இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.சல்மான் கான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டது. இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி இருப்பதால் சில மாநிலங்களில் இந்த படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர்.பல எதிர்ப்புகளுக்கு பிறகு இந்த திரைப்படம் திரையில் வெளியிடப்பட்டு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பலரும் பதான் என்ற பெயர் பொருந்தாது. இந்தியன் பதான் தான் இந்த படத்திற்கு பொருந்தும் என நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. திரைப்படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.அது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகிய நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு திரைப்படத்தின் மொத்த வசூலை மூன்று நாட்களில் ஷாருக்கான் படம் பதான் வசூல் செய்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.