சுந்தர் சி தமிழ் திரைப்பட இயக்குனர் குடும்ப படங்களை தாறுமாறாக எடுத்து வெற்றி அடைய செய்யும் ஒரு வெற்றி இயக்குனராக இன்று வரை திகழ்ந்து வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் நடிகர் ரஜினி,கமல், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் படங்களை இயக்கியுள்ளார்.அருணாச்சலம், லண்டன்,வின்னர், கிரி, கலகலப்பு, கலகலப்பு 2 போன்ற வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.இவர் பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தொடர்ந்து அரண்மனை என்னும் தொடர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அரண்மனை ,அரண்மனை 2,அரண்மனை 3 போன்ற படங்கள் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு சங்கமித்ரா என்ற வரலாறு படத்தை இயக்கப் போவதாக சுந்தர் சி அறிவித்திருந்தார். தற்பொழுது அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி வரும் இவர் சங்கமித்ரா படத்தை மீண்டும் இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.
முதலில் அறிவித்த பொழுது அந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்பொழுது ஜெயம் ரவிக்கு பதிலாக விஷால் மற்றும் ஆர்யா இந்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வந்து இருக்கிறது. சங்கமித்ரா படத்தை 450 கோடி பட்ஜெட்டில் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சங்கமித்ராவின் படத்தை 450 கோடி பட்ஜெட் செலவில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ஸ் மூவிஸ் நிர்வாணம் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது.
இதைப்பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை. இருந்தாலும் இந்த படம் வரும் வருடம் அக்டோபர் மாதம் ஷூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.